2 பேர் கைது

வீட்டின் கதவை உடைத்து பெண்ணை மிரட்டிய 2 பேர் கைது

Update: 2022-08-30 20:36 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் லிசி (வயது 38). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் லிசி வீட்டில் இல்லாதபோது, அதே பகுதியைச்சேர்ந்த குட்டிதுரை (23), ராஜா (27) ஆகிய இருவரும் சேர்ந்து லிசியின் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

பின்னர் இதுகுறித்து குட்டிதுரை, ராஜா ஆகியோரிடம் கேட்டதற்கு, லிசியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி லிசி சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து குட்டிதுரை, ராஜா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்