லாரியில் டிரைவரின் செல்போனை திருடிய 2 பேர் கைது

குருபரப்பள்ளியில் லாரியில் டிரைவரின் செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-21 17:47 GMT

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளியை சேர்ந்தவர் குலாப்சிங் (வயது 44). லாரி டிரைவர். இவர் சிக்காரிமேடு பஸ் நிறுத்தம் அருகில் லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் லாரியில் ஏறி செல்போனை திருடி செல்ல முயன்றனர். இதை கவனித்த குலாப் சிங் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பாரூரை சேர்ந்த பிரசாந்த் (21), ஹரீஷ் (19) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்