நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நீலப்பாடி ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலப்பாடி ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் பகுதியில் சாராயம் விற்ற பூலாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் அருண்குமார் (வயது26), காக்கழனி ஊராட்சி, கடுவையாற்று பாலம் அருகில் சாராயம் விற்ற காக்கழனி தோப்புத்தெருவை சேர்ந்த தமிழரசன் மகன் சந்தோஷ் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடம் இருந்தும் 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.