சாராயம் கடத்தி வந்த சிறுவர்கள் 2 பேர் கைது

சாராயம் கடத்தி வந்த சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-19 19:15 GMT

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 15 வயது, 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர் அப்போது சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் கடத்திவரப்பட்ட 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 சிறுவர்களையும் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்