வங்கி ஊழியர் கொலையில் தலைமறைவான 2 பேர் கைது

வாணாபுரம் அருகே 10 மாதங்களுக்கு முன்பு நடந்த வங்கி ஊழியர் கொலையில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-07 19:04 GMT

வாணாபுரம்

வாணாபுரம் அருகே 10 மாதங்களுக்கு முன்பு நடந்த வங்கி ஊழியர் கொலையில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கி ஊழியர்

தண்டராம்பட்டு தாலுகா எடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 52). இவருக்கு மீனாட்சி ( 50) என்ற மனைவியும் விக்னேஷ் (27), அபிராமி (23), ஸ்ரீதர் (16) என்ற மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

வீராசாமி தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். முறைகேடு சம்பவத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந்் தேதி விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் தேடிச்சென்றபோது வீராசாமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் தனி படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (58) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை கண்காணித்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பாதை தகராறில் வீராசாமியை ஆண்டியார் பாளையத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் விஷ்ணு (29) மற்றும் கமலகண்ணன், ஜோயல் ஆகியோர் உதவியுடன் கொன்றதாக தெரிவித்தார்.

கைது

இதில் சுப்பிரமணி, விஷ்ணு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கமல கண்ணன் மற்றும் ஜோயல் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

இருவரும் திருப்பத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவரவே தனிப்படை போலீசார் அங்கு சென்று கமலகண்ணன் மற்றும் ஜோயலை போலீசார் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்