2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை
பண்ருட்டி அருகே 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் மேற்கு தெருவில் வசித்து வந்தவர் சிகாமணி (வயது 55). இவருக்கு 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த சிகாமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிகாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.