ஜமாபந்தியில் 199 மனுக்கள் குவிந்தன

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 199 மனுக்கள் குவிந்தன .;

Update:2023-06-17 00:15 IST

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் மாரிச்செல்வி தலைமை தாங்கினார். இதில் முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கணினி பட்டா உள்பட மொத்தம் 199 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தியின் போது முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேசன், மண்டல துணை தாசில்தார்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர், வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத்தலைவர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டார தலைவர் சுரேஷ், வட்டார செயலாளர் பூ முருகன், வட்டார பொருளாளர் அய்யப்பன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்