குமரி மாவட்டத்தில் மழை:பேச்சிப்பாறை அணைக்கு 1,982 கன அடி தண்ணீர் வருகிறது
குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,982 கன அடி தண்ணீர் வருகிறது.
நாகர்கோவில்:
குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,982 கன அடி தண்ணீர் வருகிறது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையிலும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 10.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மற்றப்பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சிற்றார் 1- 3.4, சிற்றார் 2- 2.2, சுருளகோடு- 1.4, கன்னிமார்- 6.2, பெருஞ்சாணி அணை- 2.8, புத்தன் அணை- 2.8, தக்கலை- 1, பாலமோர்- 7.2, மாம்பழத்துறையாறு- 2, கோழிப்போர்விளை- 2.8, அடையாமடை- 3, ஆனைகிடங்கு- 1.2, முக்கடல் அணை- 3 என்ற அளவில் பதிவாகி இருந்தது.
1,982 கன அடி
அதே சமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,982 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. உபரி நீராக வினாடிக்கு 4,016 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 691 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 475 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 113 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.4 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பாசன குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அதுபோக நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.