காரில் கடத்திய 1,920 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்திய 1,920 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி கூட்டு ரோடு பகுதியில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையெடுத்து காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூரை அடுத்த சித்தேரி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் அய்யப்பன் (வயது 37), திருப்பத்தூர் டி.எம்.சி. காலனியை சேர்ந்த ராமு என்பவருடைய மகன் தனுஷ் (19) என தெரிய வந்தது. இருவரையும் போலூீசார் கைது செய்து, காரில் 1,920 மது பாக்கெட்டுகளை காருடன் பறிமுதல் செய்தனர்.