காணொலி காட்சி மூலம் 18-ந்தேதி நடக்கிறது: ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டம்

காணொலி காட்சி மூலம் 18-ந்தேதி ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

Update: 2023-01-04 20:20 GMT


மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதி காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் மண்டல ஆணையாளர் கலந்து ெகாண்டு ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வார். இந்த அலுவலகத்தில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வராமல் இருப்பது மற்றும் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை சமர்ப்பிக்கலாம். இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் 3 மாதத்தில் ஓய்வூதியம் பெற இருக்கும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 1995-இன் கீழ் உள்ள உறுப்பினர்களும், பிற நிறுவனங்களில் உள்ள தங்களுடைய வைப்பு நிதி கணக்கை ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட குறைகளை சமர்ப்பிக்கலாம். நிறுவன முதலாளிகள் கூட ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட தங்களுடைய குறைகளை சமர்ப்பிக்கலாம். இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட தங்களது குறைகளை வாட்ஸ்அப் வசதியுள்ள தங்கள் தொடர்பு கைபேசி எண்ணுடன் இந்த அலுவலக மின்அஞ்சல் முகவரிக்கு ro.madurai@epfindia.gov,in வருகிற 13-ந்தேதிக்குள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்