திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-08 19:07 GMT


திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது.இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பயணியிடம் இருந்த கிரைண்டர் மோட்டாரை கைப்பற்றி சோதனை செய்ததில் அதில் தங்கம் மறத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் கூறுகையில்,

அந்த தங்கம் சுமார் 349 கிராம் எடை இருக்கும் என்றும் அதன் மதிப்பு 18 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.மேலும் தங்கத்தை கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்