சூதாடிய 18 பேர் கைது

Update: 2023-04-23 16:23 GMT


திருப்பூரில் நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம்- மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் வைத்து சூதாட்டம்

திருப்பூர் ராயபுரத்தை அடுத்த சூசையாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு பணம் வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.

18 பேர் கைது

பின்னர் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வீடு தேவராஜ் என்பவரது வீடு என்பதும், அங்கு பாபு என்பவரின் தலைமையில் 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து 18 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 450 பணம், 5 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்