பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 17 பன்றிகள் பிடிபட்டன
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 17 பன்றிகள் பிடிபட்டன;
தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 7, 27-வது வார்டுகளில் உள்ள வடக்கு வாசல் மற்றும் இடையர் தெரு பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் படி தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 17 பன்றிகளை நேற்று பிடித்து அப்புறப்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.