திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு 17 பேர் மனுத்தாக்கல்

திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2023-06-10 17:45 GMT

திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தி.மு.க. சார்பில் ஊரக பகுதிக்கு 8 பேரும், நகர பகுதிக்கு 4 பேரும் என 12 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அப்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், வேளாண் உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் நகர பகுதிக்கு 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கடைசி நாளில் மொத்தம் 17 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்