ரூ.16 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

ரூ.16 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

Update: 2023-08-30 19:30 GMT

கோவை

பயணிக்கு சேவை குறைபாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.16 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் பஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பஸ் பறிமுதல்

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.எம்.கவுதம் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் அங்கிருந்து கோவைக்கு வருவதற்கு 2022 மே 26-ந் தேதி படுக்கை வசதி கொண்ட எம்.ஜே.டி. தனியார் ஏசி பஸ்சுக்கு, ஆன்லைன் பயண முன்பதிவு தளத்தின் மூலம், ரூ.1,029 செலுத்தி முன்பதிவு செய்திருந்தேன். அன்றையதினம் மதியம் 1.45 மணிக்கு பஸ் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்தது. அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர், சாலைவரி கட்டாததால் அந்த பஸ்சை பறிமுதல் செய்தார்.

இழப்பீடு

ஆனால் தனியார் பஸ் நிறுவனத்தினர், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை. 3 மணி நேரத்துக்கு பிறகு, இரவு 9 மணியளவில் அனுப்பிய ஏசி, படுக்கை வசதி இல்லாத மினி பஸ்சில் 200 கி.மீ-க்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் குறித்த நேரத்திலும் கோவைக்கு வர முடியாததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. நான் செலுத்திய டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்கவும், மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். அதை விசாரித்த மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர் கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர், மனுதாரர் டிக்கெட் கட்ட ணமாக செலுத்திய ரூ.1,029-ஐ தனியார் பஸ் நிறுவனம், ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனம் ஆகியவை திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்