15-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பம் கண்டெடுப்பு

களம்பூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-09-07 17:34 GMT

ஆரணி

களம்பூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

சோழர் கால சிற்பம்

படவேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல தொல்லியல் ஆய்வாளராக உள்ளார். இவர் களம்பூர் அருகே வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள மகா தேவனேஸ்வரர் சிவன் கோவிலில் ஆய்வு செய்தபோது 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பத்தை கண்ெடடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மகா தேவனேஸ்வரர் சிவன் கோவில் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும். இக்கோவிலில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு சம்புவராயர், விஜயநகர காலத்து பேரரசர்களின் கால கட்டத்தில் பல வளர்ச்சி நிலைகளை பெற்றுள்ளது.

தூங்குதலை சிற்பம் சுமார் 3½ அடி உயரமும், 2 அடி அகலமும், உறுதியான கருங்கல்லால் புடை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் சிறப்பு அம்சம் தன்னுடைய உயிரை பற்றி சிறிதும் துக்கமடையாமலும் முகமலர்ச்சியுடன் தோற்றமளிக்கிறது.

சமூக அக்கறை

இதனை செதுக்கிய சிற்பி வீரனது மனநிலையை கண்டு தனது வெற்றியை பெரிதாக கருதாமல் தனது தலையை காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடனை இறைவனுக்கு அர்ப்பணிப்பு, பின் களைப்பினை அவனது முகம் காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழங்கால இலக்கியங்களில் குறிப்பாக பெரிய புராணம், மணிமேகலை ஆகியவற்றில் குறிப்பு கிடைக்கின்றன. மேலும் தங்களது இன குழு மக்களின் நலனுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளுதல் அல்லது அர்ப்பணித்தல் என்பது சமூக அக்கறையாக இருந்துள்ளது. இதுபோன்ற சமூக அக்கறையை இதுபோன்ற சிற்பங்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

புராணக் கதைகளில் இது போன்ற பலி மற்றும் பலியின் போது சிந்தும் ஒரு துளி ரத்தத்திலிருந்து பல உயிர்கள் தோன்றி சமூக அமைப்பு காத்தல் போன்றவற்றை பற்றி அறிகிறோம்.

இதுபோன்ற சிற்பங்கள் வேலூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிறைய கிடைக்கின்றன

இவ்வீரனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட கவசம், காதணி, கழுத்து அணிகள், கைக்காப்பு கால், தண்டை கயிறு, கைகளில் கட்டப்பட்ட அலங்காரம், வலது கரத்தில் நீண்ட கத்தி இடது கையில் உள்ளது. கத்தி கழுத்தில் வைத்து தலையை காணிக்கைக்காக தயார் நிலை முகத்தில் முரட்டு மீசை மற்றும் கீழாடையும் சிரித்த முகத்துடன் தோற்றமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்