நெகமம் பகுதியில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 156 மனுக்கள் பெறப்பட்டன

நெகமம் பகுதியில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 156 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-05-31 00:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரிய நெகமம் உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில் கள்ளிப்பட்டி, பெரியநெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனூர், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, போளிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை கொடுத்தனர். ஜமாபந்தி அதிகாரியும், சப்-கலெக்டருமான பிரியங்கா கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு கேட்டு உள்பட 156 மனுக்கள் பெறப்பட்டன. கோலார்பட்டி உள்வட்டத்திற்கு உட்பட்ட சோலபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதூர், எஸ்.மலையாண்டிபட்டிணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி ஆகிய கிராமங்களுக்கு இன்று (புதன்கிழமை) ஜமாபந்தி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்