ஒரு நாளைக்கு 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்

கொள்முதல் நிலையங்களில் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை இருப்பதால் ஒரு நாளைக்கு 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-29 18:45 GMT

நன்னிலம்:

கொள்முதல் நிலையங்களில் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை இருப்பதால் ஒரு நாளைக்கு 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா, தாளடி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நேரடியாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கொள்முதல் நிலையங்கள்

விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சிட்டா அடங்கல் பெற்று பின்னர் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

10 நாட்கள் காத்துக்கிடக்கும் அவலம்

இங்கு நாள் ஒன்றுக்கு 700 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை நெல் மூட்டைகளுடன் காத்திருந்து விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஒரு நாளைக்கு 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் நெல் மூட்டைகள் பாதிக்கும் நிலை உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்