ரூ.45 லட்சத்தில் 15 டிரான்ஸ்பார்மர்கள்

ரூ.45 லட்சத்தில் 15 டிரான்ஸ்பார்மர்களை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2022-08-29 17:08 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மின்வாரிய கோட்டத்திற்க்குட்பட்ட நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 15 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மர்களை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் தும்பேரி, அரப்பாண்டகுப்பம், ஆவாரங்குப்பம், மல்லங்குப்பம், தெக்குப்பட்டு, பச்சூர், கொத்தூர், ஆத்தூர்குப்பம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பெரியகம்மியம்பட்டு, பெரியமோட்டூர், மண்டலவாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இதன்மூலம் சுமார் 25 விவசாயிகளுக்கு தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நீக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்