வரிபாக்கி செலுத்தாத 15 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்'

வரிபாக்கி செலுத்தாத 15 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

Update: 2022-11-13 12:46 GMT

ஆம்பூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகள், சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவையில் இருந்து வருகிறது. இது குறித்து நகராட்சி சார்பில் அறிவுறுத்தியும் நிலுவைத் தொகை செலுத்தவில்லை என தெரிகிறது. இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஷகிலா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் கோமளா தலைமையிலான வருவாய் குழுவினர் ஆம்பூர் வி.ஏ.கரீம் ரோடு, எம்.சி.ரோடு, எஸ்.கே.ரோடு, வாணக்காரகொல்லை ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை பூட்டி 'சீல்' வைத்தனர்.

இதேபோல் அப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் கட்டணம் நிலுவையில் வைத்திருந்த பல்வேறு வீடுகளில் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். நகராட்சி வரிப்பாக்கி வைத்துள்ளவர்கள் தங்களுக்கான வரி நிறுவையை உடனடியாக நகராட்சி அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ செலுத்தி நகராட்சி நடவடிக்கையை தவிர்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்