நெல்லை மாவட்டத்தில் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 12-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடத்திய போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 15 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 162 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.