திருச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-09 18:06 GMT

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் 12 பேருக்கு பாதிப்பு என பதிவான நிலையில், நேற்று ஒரேநாளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்