விழுப்புரம் மாவட்டத்தில்கஞ்சா விற்ற மேலும் 15 பேர் கைதுமதுபானங்கள் விற்ற 49 பேர் சிக்கினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-05-13 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கை கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார், அதிரடியாக கஞ்சா வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த 12 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 45 பேரை போலீசார் கைது செய்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் கஞ்சா விற்பனை செய்ததாக விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த மலர்ராஜ் (வயது 20), மாதேஷ் (20), விழுப்புரம் வி.ஜி.பி. நகரை சேர்ந்த குருமூர்த்தி (20), விழுப்புரம் சானாந்தோப்பை சேர்ந்த சரவணன் (27), மனோகர் (26), அரசூர் கணேஷ் (20), தைலாபுரம் கேசவன் (24), மரக்காணம் சஞ்சய் (22) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம், மதுபானம் விற்றதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடமிருந்து 100 லிட்டர் சாராயம், 60 லிட்டர் சாராய ஊறல், 400 மதுபாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்