ரூ.15 லட்சம் நிலம் மீட்பு

போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது

Update: 2022-12-21 20:21 GMT

நெல்லை அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரின் தந்தைக்கு பல்லிக்கோட்டை பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கர் 19 சென்ட் நிலம் உள்ளது. சரவணக்குமார், தனது தந்தை இறந்துவிட்டதால் அந்த நிலத்தை பாக பிரிவினைக்காக வில்லங்கச் சான்று எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த இடம் போலி ஆவணம் மூலம் மற்றொருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலத்தினை மீட்டுத்தருமாறு சரவணக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுத்தார். அவர், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ்க்கு உத்தரவிட்டதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி நிலத்தை மீட்டனர். பின்னர் அதற்கான ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நில உரிமையாளர் சரவணக்குமாரிடம் நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்