15 நாட்கள் தடை உத்தரவு
நெல்லை மாநகரில் 15 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகரில் நேற்று 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடுதல், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.