இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் கைது

Update: 2022-10-30 16:25 GMT


கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு நேற்று திருப்பூர் குமரன் சிலை முன் இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 15 பேரை வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்