கோவையில் 144 பேருக்கு கொரோனா

கோவையில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற் பட்டது.

Update: 2022-07-04 16:55 GMT


கோவையில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற் பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 319 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், கோவையில் கொரோனா தொற்று ஏற்படுகிறவர்களில் 80 சதவீதம் பேருக்கு மிகக்குறைந்த பாதிப்பே உள்ளது. 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்