புகையிலை பொருட்கள் விற்ற 14 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 14 கடைகளுக்கு அபராதம்
முத்துப்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அரசு- தனியார் பள்ளிகள் அருகே நூறு மீட்டர் வரை கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்க கூடாது என்று அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முத்துப்பேட்டை வட்டார சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், கதிரவன், பாலசண்முகம், விக்னேஷ் ஆகியோர் அடங்கிய சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, தர்கா, தில்லைவிளாகம் ஆகிய பகுதியில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 14 கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அந்தந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.