படகு உரிமையாளர்களுக்கு ரூ.56 லட்சம் நிவாரண தொகை

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 14 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.56 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-09-29 18:45 GMT

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 14 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.56 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நிவாரண தொகை

ராமநாதபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த படகு உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி வஇலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 14 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.56 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.ழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகைக்கான காசோலை வழங்கினார்.

ரூ.56 லட்சம்

அதன்படி 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம், 4 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் காசோலைகளை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.56 லட்சம் நிவாரண தொகையினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்