1,325 அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி அளிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் சிப்காட் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2023-10-18 22:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் சிப்காட் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பேசும்போது, பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் https://nammaschool.tnschools.gov.in என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிதி, பொருட்கள், களப்பணி ஆகியவற்றின் மூலம் பங்களிப்பை கொடுக்கலாம். நம்ம ஸ்கூல் பவுண்டேசன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள், பள்ளியுடன் தங்களுடைய பிணைப்பை புதுப்பித்து கொள்ளலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,325 அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், விளையாட்டு உபகரணங்கள் என 312 வகையான தேவைகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கான பணிகள், மதிப்பீடு போன்றவையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்