1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

எட்டயபுரம் அருகே 1,300 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலி பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-22 18:45 GMT

தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் எட்டயபுரம்-விளாத்திகுளம் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தலா 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் மொத்தம் 1,300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியை சேர்ந்த சேர்மக்கனி மகன் சுந்தர் என்ற கார்த்திக் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் பன்றி பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 1,300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த கார்த்தி என்ற பாம்பு கார்த்திக், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்