பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள் தங்கி இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது
தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் தங்கி உள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி வனத்துறை அதிகாரிகள் மூலம் நேற்று நடைபெற்றது. அதன்படி சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்து உள்ள காரப்பாக்கம், பெரும்பாக்கம் உள்பட 9 இடங்களில் வனத்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நில வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இனப்பெருக்கம், சுற்றுலா என வெளிநாட்டு பறவைகளான ஊசி வால் வாத்து, தட்டை வாயன், சிறவி, யூரேசிய விஜியன் என்ற டாப்ளிங் வாத்து, கிளுவை, கருவால் மூக்கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் அதிகமாக காணப்பட்டது. மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரத்து 178 பறவைகள் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.