கோவில் திருவிழாவில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பரிதாப பலி!

தாத்தா,பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் லாவண்யா 7-ஆம் வகுப்பும், புவனேஷ் 4-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

Update: 2023-03-14 05:38 GMT

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை

சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது மனைவி காஞ்சனா இவர்களுக்கு லாவண்யா (13) என்ற ஒரு மகளும், புவனேஷ் (9) என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

சரவணனின் மனைவி காஞ்சனா குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரவணன் லாவண்யாவையும், புவனேஷையும் விச்சந்தாங்களிலுள்ள மாமனார் காண்டீபன் வீட்டில் விட்டு விட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

தாத்தா,பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் லாவண்யா 7-ஆம் வகுப்பும், புவனேஷ் 4-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழைமை விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் திருவிழா நடைபெற்றது. இரவு சாமி உற்சவ ஊர்வலத்திற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடு மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.

சாமி வீதியுலாவில் கலந்துக்கொள்ள ஆசைப்பட்ட சிறுமி லாவண்யா தனது தாத்தாவிற்கு தெரியாமல் மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்தப்படி சென்று உள்ளார்.

ஆசையுடன் திருவிழாவை ரசித்து பார்த்தப்படி சென்ற லாவண்யாவின் தலைமுடி மாட்டு வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜென்ரேட்டரில் தலைமுடி சிக்கி உள்ளது. சிறுமியின் கதறல் சத்தத்தினை கேட்டு ஓடிவந்தவர்கள் உடனடியாக ஜென்ரேட்டரின் இயக்கத்தினை நிறுத்தி சிறுமியை மீட்டு உள்ளனர்.

தலையின் மேல் பகுதி முழுவதும் பெயர்ந்து, படுகாயங்களுடன் இருந்த சிறுமியை உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்