லாரியில் கடத்தி வரப்பட்ட 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சின்னசேலம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் மீது வழக்கு

Update: 2022-11-18 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே கீழ்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மியாடிக் மனோ தலைமையில் போலீசார் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பாக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 13½ டன் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 55) என்பதும், புதுச்சேரியில் இருந்து ரேஷன் அரிசியை நாமக்கல்லுக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து டிரைவர் மற்றும் 13½ டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கீழ்குப்பம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட 13½ டன் ரேஷன் அரிசியை சின்னசேலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் சின்னசேலம் குடிமை பொருள் தனி தாசில்தார் கமலம் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்