மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை

முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

Update: 2022-10-04 06:47 GMT

சென்னை,

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் வேலை எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்