சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

Update: 2022-07-07 18:54 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 10 மணி, 10.20 மணி, 11 மணி, 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கும், அதேபோல் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 10.45 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.15 மணி மற்றும் 11 மணிக்கும் புறப்படும் 13 மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்