திருவாரூர் மாவட்டத்தில் நாளை 1,282 பள்ளிகள் திறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 1 முதல் 10 வகுப்பு வரை 1282 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி வகுப்பறைகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

Update: 2022-06-11 18:02 GMT

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 1 முதல் 10 வகுப்பு வரை 1282 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி வகுப்பறைகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 12-ம் வகுப்புக்கு 20-ந் தேதியும், 11-ம் வகுப்புக்கு 27-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளது.

தூய்மை பணிகள்

கடந்த கொரோனா காலகட்டத்தில் குறைந்த நாட்களே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 1282 அரசு, அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி வகுப்பறை, ஆய்வகம், மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் பள்ளி வளாகம் என அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன.

வர்ணம் பூசுதல்

பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைபடுத்துதல், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்தல், கரும்பலகையில் வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.பள்ளி திறக்கப்படுவதையொட்டி கடந்த ஒரு மாதமாக மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு உற்சாகமாக வர உள்ளனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மன்னார்குடி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படுவது மட்டுமின்றி பள்ளி வளாகங்களில் இருந்த செடி கொடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்