தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி
தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை அரவை செய்து, அரிசியாக மாற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி, 120 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.