லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்

கருமத்தம்பட்டியில் லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டியில் லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) மினி லாரியில் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும், லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓட முயன்றார்.

மூட்டை, மூட்டையாக...

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை துரத்தி சென்று, மடக்கி பிடித்தனர். பின்னர் லாரியில் ஏறி ேசாதனையிட்டனர். அப்போது, மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் 120 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்