ரூ.120 கோடியில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி

தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-10 13:11 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

4 வழி சாலை

திருவண்ணாமலை - அரூர் சாலையில் தமிழக முதல்- அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ்செட்டிப்பட்டு முதல் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் வரை 13.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.120 கோடி மதிப்பில் இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் தென்பெண்ணையாற்றில் குறுக்கே கொளமஞ்சனூரில் பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இந்த நிலையில் இன்று தானிப்பாடியில் இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் தென்பெண்ணையாற்றில் பாலம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அதிகாரிகளிடம் சாலையின் தரம் மற்றும் பணியின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒப்பந்த காலத்திற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, சரவணன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர்கள் ராஜ்குமார், ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்