குமரி மாவட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.1.20 கோடிக்கு ஏலம்

குமரி மாவட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.1.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது

Update: 2022-06-07 19:07 GMT

சுசீந்திரம், ஜூன்.8-

குமரி மாவட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.1.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது

ஏலம்

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் தனிநபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட கோவில் நிர்வாக அலுவலகத்தில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையிலும், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையிலும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிம (ஒரு வருட காலத்திற்கு) ஏலம் நடத்தப்பட்டது.

இதில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பூமாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.25 லட்சத்து 51 ஆயிரத்திற்கும், 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் உரிமம் ரூ.25 லட்சத்து 25 ஆயிரத்திற்கும், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்திற்கும், கேமரா மற்றும் பாதுகாப்பு உடைமைகளை பாதுகாக்கும் உரிமம் ரூ.2 லட்சத்து ஆயிரத்திற்கும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உடை மாற்றும் அறை உரிமத்திற்கான ஏலம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரமும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மரத்திலான கை, கால், மண்டை விற்பனை செய்யும் உரிமம் ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்துக்கும், பொங்கல் இடுவதற்கான பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரமும், வெள்ளியாலான கை, கால், மண்டை விற்பனை செய்வதற்கான உரிமம் ரூ.10 லட்சத்து 58 ஆயிரமும், வேளி மலை முருகன் கோவிலில் பன்னீர் விற்பனை செய்யும் உரிமம் ரூ.60 ஆயிரத்து 189-ம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உப்பு, மிளகு விற்பனை செய்யும் உரிமம் ரூ.38 ஆயிரத்திற்கும் மற்றும் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோவிலில் பூமாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்திற்கும், வாகன கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 300-க்கும் என நேற்று மட்டும் ரூ.1 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 489 வசூல் ஆகி உள்ளது என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்