புகைபிடித்த 12 பேருக்கு அபராதம்
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புகைபிடித்த 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளுக்கு இடையூறாக புகைபிடித்து கொண்டிருந்த 12 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். இதை தொடர்ந்து 12 பேருக்கும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் மெயின்ரோட்டில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, ரூ.1,000 அபராதம் விதித்தனர்.