ஓசூரில் 11-வது புத்தக கண்காட்சி

ஓசூரில் புத்தக கண்காட்சியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்.

Update: 2022-07-08 17:24 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து, ஓசூரில் 11-வது புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் ஹில்ஸ் ஓட்டல் வளாகத்தில் புத்தக கண்காட்சியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் தேன்மொழி, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து அரங்குகளை பார்வையிட்டு விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசுகையில், இந்த புத்தக கண்காட்சி 12 நாட்கள் நடக்கிறது. 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார், புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், வணங்காமுடி ஆகியோர் பேசினார்கள். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜயபாஸ்கர், கவுன்சிலர் சசிதேவ், புத்தக கண்காட்சி துணைத்தலைவர்கள் சத்யமூர்த்தி, நீலகண்டன் மற்றும் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். புத்தக கண்காட்சி தலைவர் அறம் கிருஷ்ணன் வரவேற்றார். அரிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்