கூட்டுறவுத் துறை சார்பில் 1697 பேருக்கு ரூ.11.64 கோடி கடனுதவி
கூட்டுறவுத் துறை சார்பில் 1697 பேருக்கு ரூ.11.64 கோடி கடனுதவிகளை அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
கூட்டுறவுத் துறை சார்பில் 1697 பேருக்கு ரூ.11.64 கோடி கடனுதவிகளை அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம், கலசபாக்கம் வட்டாரத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து கூட்டுறவுத் துறை சார்பில் காஞ்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் கா.ஜெயம் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுறவு சங்கங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களையும் பயனாளிகளுக்கு பல்வேறு விதமான கடனுதவிகளையும் வழங்கினர்.
இதில் 161 நபர்கள் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 25 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்கப்பட்டது.
82 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,058 பயனாளிகள் உள்பட 1697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், உதவி பொது மேலாளர்கள், வங்கி பணியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஜி.பி.ஆனந்தி நன்றி கூறினார்.