திண்டுக்கல் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
நல்லாசிரியர் விருது
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தமிழக அரசு தேர்வு செய்து, நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மொத்தம் 393 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. சென்னையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
11 பேர்
கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், வடமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன்சேசுராஜ், கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்பு உலகநாதபாண்டியன், பிள்ளையார்நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஷாஜகான், திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர்.
திண்டுக்கல் காந்திஜிரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வனிதா, நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலமுருகன், ரெட்டியார்சத்திரம் தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராகவன், சாணார்பட்டி பூவக்கிழவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மார்க்கரெட்மேரி, பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. சாலா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியசரஸ்வதி, திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெய்சி பெல் ஷாலோம் ஆகிய 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.