10 வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!

10 வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-05-19 09:41 GMT

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள்/ தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

* ஜூன் 27 – மொழிப்பாடம்.

* ஜூன் 28 – ஆங்கிலம்.

* ஜூன் 30 – கணிதம்.

* ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபடம்.

* ஜூலை 3 – அறிவியல்.

* ஜூலை 4 – சமூக அறிவியல்.

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27-ந் தேதி வரையும் விண்ணபிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்