10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

புளியங்குடி அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-29 17:09 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டக்குறிச்சி கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலா. இவர் பட்டக்குறிச்சி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் சகுந்தலாதேவி (வயது 16). இவர் புளியங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சகுந்தலாதேவி கடந்த 27-ந் தேதி அன்று வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை ஜெயக்குமார், பரீட்சை நேரத்தில் படிக்காமல் டி.வி. பார்க்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மனமுடைந்த சகுந்தலாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சகுந்தலாதேவியை உடனடியாக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை சகுந்தலாதேவி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்