10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 226 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வில் 26 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. இதேபோல் 6 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் ஒரு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதேபோல் 90 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் 44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளன.