108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.;
பொள்ளாச்சி,
வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சாகுல் பாசிம். இவரது மனைவி சாய்ரா பேகம் (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான அவரை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்கு அழைத்து வந்தனர். ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகில் வந்த போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் பிரவீன்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்சில் சாய்ரா பேகத்திற்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.