108 சங்காபிஷேக விழா

பரமத்திவேலூரில் பாலஅய்யப்ப சாமி கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-10-04 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் எழுந்தருளியுள்ள பாலஅய்யப்ப சாமி கோவிலில் புரட்டாசி மாத ரோகிணி நட்சத்திரத்தைெயாட்டி 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவைெயாட்டி நேற்று காலை பாலஅய்யப்ப சாமிக்கு கணபதி ஹோமமும், பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்